நண்பர்களே, இது போன்றதொரு இனிமையான தருணங்களை நான் வாழ்க்கையில் பார்த்து பல நாள் ஆகிறது. அதிகாலை எழுந்து, நண்பர்களுடன் கடைக்கு பறந்து சென்று, காத்துகிடந்து, வேன் வந்ததும் கோஷமிட்டு பாடலை வாங்கி, ப்ளேயரில் போட்டு…. காது குளிர கேட்டு…. அப்பப்பா… பேரானந்தம்!!!!!!!!!!
ரிச்சி தெருவிற்கு காலை ஆடியோ சி.டி.க்களின் பார்சல் வேன் வந்ததும் அதை எதிர்கொண்டு வரவேற்று விசில் சத்ததுடன் பட்டாசு வெடிக்கும் அந்த தருணத்தில் நாம் போட்டது ஒரே ஒரு கோஷம் தான்: “இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழங்கும் – எந்ந்ந்ந்திரன் வாழ்க!” என்பது தான். (ரிச்சி தெரு கொண்டாட்டங்கள்… படங்களுடன் விரைவில்…)
அதற்க்கு முன்பு…. ஒரிஜினல் சி.டி.வாங்கினால் உங்களுக்கு கிடைக்கப்போவது பாடல் மட்டுமல்ல… 14 பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய BOOKLET கூட. பாடல்வரிகளுடன், அந்த பாடல் சம்பந்தப்பட்ட புகைப்படத்தையும் தாங்கி வந்திருக்கும் இது BOOKLET அல்ல; புதையல்.
காக்கி சட்டையும், சிவப்பு சட்டையுமே தலைவனுக்கு தந்து உலவவிட்ட இயக்குனர்களுக்கு மத்தியில் தலைவரை இப்படியெல்லாம் ஒரு பிரமாதமான காஸ்ட்யூமில் பார்க்க காரணமாயிருந்த ஷங்கருக்கு கோடானுகோடி நன்றிகள்.
இது யார் யாரோ நடித்திருக்க வேண்டிய படம்… ஆனால், இறைவனின் எண்ணப்படி அது இறுதியில் வந்தது தலைவனைத் தேடி தான். இந்த படத்தில் நடிக்க தலைவன் முடிவு செய்தது… அவர் வாழ்க்கையில் எடுத்த மிக சரியான முடிவுகளில் ஒன்று…!
ஸ்டில்களை பார்த்தே கூறிவிடலாம்… படம் பெறப்போகும் இமாலய வெற்றியை…
BOOKLET ஐ தரிசியுங்கள்…. இங்கு. ஒரிஜினல் சி.டி. வாங்கி நேரிலும் ரசியுங்கள்…
இது போன்றதொரு ரிச்சான பாடல்களுக்கு இசையமைக்க இசைப் புயலால் மட்டுமே முடியும்… அதை இயக்க ஷங்கர் ஒருவரால் மட்டுமே முடியும்… அதில் நடிக்க தலைவரால் மட்டுமே முடியும்…
பாடல்கள் எப்படி இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்…?
சூப்பர் என்பதற்கு இணையாக ஆங்கிலத்தில் தமிழில் எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ அத்தனையையும் எடுத்துக்கொள்ளுங்கள். போதுமா? (மாற்றுக் கருத்து உடையவர்களை என்னிடம் பேசச் சொல்லுங்கள்!!)
சூப்பர் என்பதற்கு இணையாக ஆங்கிலத்தில் தமிழில் எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ அத்தனையையும் எடுத்துக்கொள்ளுங்கள். போதுமா? (மாற்றுக் கருத்து உடையவர்களை என்னிடம் பேசச் சொல்லுங்கள்!!)
புதிய மனிதா பாடலை கேட்டவுடன் ஒரு கணம் அழுதே விட்டேன்….. மிகையல்ல….நீங்களும் உணர்வீர்கள்…
(என் காலர் ட்யூன் இப்போ ‘நான் கண்டது ஆறறிவு’ ங்க…)
Stay tuned for more updates…. (Double Click on the images to Zoom and read!)
தந்திர மனிதன் வாழ்ந்ததில்லை..
எந்திரம் வீழ்வதில்லை!
[END]
0 comments:
Post a Comment