Saturday, July 31, 2010

வெளியானது எந்திரன் பாடல்கள் : சிடி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் ‘எந்திரன்’. இதை சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வண்ணம், அதி நவீன தொழில் நுட்பத்துடன் படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி உள்ளார். இதற்கான தொழில்நுட்ப பணிகள் மட்டும் வெளிநாட்டில் பல மாதங்கள் நடந்து வந்தது.

வெளியானது எந்திரன் பாடல்கள்
இதனையடுத்து எந்திரன் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. வெளியான சிறிது நேரத்தில் சிடி கடைகளில் ரசிகர்கள் கூட்டம் எந்திரன் படத்தின் பாடல் கேசட்களை வாங்க அலைமோதியது. எந்திரன் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ‘புதிய மனிதா’, ‘காதல் அணுக்கள்’, ‘அரிமா அரிமா’ ஆகிய பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘கிளிமஞ்சாரோ’ என்ற பாடலை பா.விஜய்யும் ‘இரும்பிலே ஒரு இருதயம்’, ‘பூம்பூம் ரோபாடா’ ஆகிய பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர். இதுதவிர, ‘சிட்டி டான்ஸ் ஷோகேஸ்’ என்ற பாடலை ராப் பாடகர் யோகி. பி, பிரவிண் மணி, பிரதீப் விஜய் இணைந்து பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இதில் ரகுமானின் மகள் கதிஜா, முதன் முறையாக ‘புதிய மனிதா’ என்ற பாடலை ரகுமான், எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment