Thursday, July 29, 2010

“எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

ந்திரன் ஆடியோ போஸ்டர்கள் தயாராகி ஆடியோ WHOLESALE மார்க்கெட்டான ரிச்சி தெருவிற்கு வந்து இறங்கியவுடன் அடுத்த நொடி நமக்கு அது குறித்து தகவல் வந்துவிட்டது. நமது தளத்திற்காக அந்த போஸ்டர்களை புகைப்படமெடுத்துவிட்டு
அப்படியே முக்கிய ஆடியோ டீலர்களையும் பார்த்து பேசிவிட்டு வரலாம் என்று திட்டமிட்டோம்.

நாம் போகும்போது மாலை 7.00 / 7.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பகலில் நேரமிருக்காது. ஈவ்னிங் ஆயிடுச்சுன்னாலே போட்டோ எடுக்க சவாலான நேரம் தான். காரணம் கேமிராவிலிருந்து வெளிவரும் FLASH வெளிச்சம் போஸ்டர்கள் மீது பட்டு REFLECT ஆகி படத்தை சரியாக பிரதிபலிக்காது. இருப்பினும் நம்பிக்கையுடன் களமிறங்கினோம்.

IMG 4638 640x480  “எந்திரன்  ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி  ரிப்போர்ட்!

——————————————————-
ரிச்சி தெருவில் நாம் முதலில் சந்தித்தது, சூப்பர் ட்ராக்ஸ் என்னும் கடையை தான். ஆடியோ WHOLE SALE DEALER களில் முக்கியமான கடை இது. கடையின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அசத்தலான போஸ்டரை போவோர் வருவோர் அனைவரும் ஒரு கணம் நின்று ரசித்து பார்த்துவிட்டு சென்றனர். பலர், ஆர்வமுடன் விசாரித்த வண்ணமிருந்தனர்.

நாம் கடையின் உரிமையாளர் திரு.கிஷோரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டு உரையாடினோம். போஸ்டர் ஒட்டப்பட்டதிலிருந்து நல்ல ENQUIRY வருவதாகவும், பொதுமக்கள் பலர் விசாரித்துவிட்டு செல்வதாகவும் கூறினார். நாளிதழ்களில் விளம்பரம் வெளியானால் அதன் பிறகு ENQUIRY க்கள் அதிகரிக்கும் எனவும் ஆகவே விளம்பரத்தை எதிர்பார்த்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

IMG 4620 640x480  “எந்திரன்  ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி  ரிப்போர்ட்!

பொதுவாக அதிகமாக விற்கும் படங்கள் எது?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படங்களின் ஆடியோ விற்பனை தான் எப்போதும் முன்னணியில் இருக்கும். தவிர அந்த காலகட்டங்களுக்கேற்ப ஹிட்டாகும் சில படங்களின் ஆடியோ சி.டி.க்களும் அதிகம் விற்கும். உதாரணத்திற்கு சுப்ரமணியபுரம், விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை.

சமீப காலங்களில் அதிகம் விற்கும் ஆடியோ எது?
மதராசப்பட்டினம், பையா, நான் மகான் அல்ல.

கடைசியாக உங்கள் கடையில் அதிகபட்சம் விற்ற ஆடியோ எது?
சிவாஜி

ஒரு அளவுகோலுக்காக கேட்கிறேன்… மற்ற படங்களின் ஆடியோவுக்கும் சூப்பர் ஸ்டாரின் படங்களின் ஆடியோவுக்கும் விறபனையில் உள்ள வித்தியாசம் என்ன?
அதன் விற்பனையுடன் எதையும் ஒப்பிட முடியாது. நீங்க கேக்குறதால சொல்றேன். சூப்பர் ஸ்டாரின் படங்களின் ஆடியோ மூன்று மடங்கு அதிகம் விற்கும்.

IMG 4629 640x480  “எந்திரன்  ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி  ரிப்போர்ட்!

எந்திரனுக்கு ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
சிவாஜியின் சாதனையை முறியடிக்கும் வகையில் இருக்கும்.
கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உற்சாகமாக பதில் சொன்ன திரு.கிஷோரும் அவரது பணியாளர்களும், நாம் போஸ் கொடுக்குமாறு கேட்டவுடன் உற்சாகமாக கட்டை விரலை காண்பித்து போஸ்கொடுத்தனர்.

நாம் புகைப்படமெடுக்க எடுக்க அந்த சூழ்நிலையே பரபரப்பானது.

——————————————————-
டுத்தது நாம் சென்றது, New DiscWorld என்ற கடைக்கு. Raheja Complex க்கு எதிரில் உள்ள சிறிய கடை.

அங்கு அப்துல் ரஹ்மான் என்பவரிடம் நாம் பேசியதிலிருந்து:

எந்திரன் ஆடியோ எப்போங்க கிடைககும்?
“சனிக்கிழமை காலைல”

போஸ்டரை பார்த்து யாராவது கேக்குறாங்களா?
அட… பதில் சொல்லி சொல்லி எனக்கு சலிச்சிபோச்சு சார். அந்தளவு கேக்குறாங்க.

உங்க கடையில் நல்லா இப்போ விக்கிற ஆடியோ எது?
பையா, சிங்கம், மதராசப்பட்டினம், அங்காடி தெரு, விண்ணை தாண்டி வருவாயா

New Disc WorldJ 640x853   “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு  நேரடி ரிப்போர்ட்!

உங்க கடையில அதிகபட்சம் சேல்ஸ் ஆன ஆடியோ எது?
சிவாஜி, சந்திரமுகி

சரி.. மத்தது எவ்ளோ விக்கும் ரஜினி படங்கள் எவ்ளோ விக்கும்?
(அங்கேயிருந்த கஸ்டமர் ஒருவர் நம்மை முறைத்து… “அவர் படங்களோட தயவு செய்து எதையும் கம்பேர் பண்ணாதீங்க சார். அது கடைசி வரைக்கும் மூவ் ஆயிட்டேயிருக்கும். மத்ததெல்லாம் அப்படி கிடையாது” என்றார் சூடாக.)

அப்துல் ரஹ்மான் தொடர்கிறார் – “மத்தது 100 போச்சுனா ரஜினி படம் 300 இல்ல 400 போகும். அவர் படமெல்லாம் கேசட்/சி.டி. வந்தா பேலன்ஸ் ஒன்னு கூட தங்காது. முழுசா வித்துடுவோம். ஸ்டாக் ஃ ஃபுல்லா காலியாகி, ரெண்டாவது, மூணாவது லாட் வரைக்கும் ஆர்டர் செய்வோம்”.

சிவாஜிலாம் பார்த்தீங்கன்னா கடைசி வரைக்கும் போய்கிட்டே இருந்துச்சு. படம் ரிலீசான பிறகு கூட சி.டி. வித்துகிட்டே இருந்தச்சு.

எந்திரன் எப்படி………..?
அதெல்லாம் சாலிட்டா போகும். ரஹ்மான் ம்யூசிக் வேற. கேட்கணுமா என்ன… நாங்க எல்லாம் interestaa வெயிட் பண்ணிகிட்டுருக்கோம்.

நம் கேட்டதும் வெற்றி என்பது போல கட்டை விரலை காட்டி போட்டோவுக்கு உற்சாக போஸ் கொடுத்தார் ரஹ்மான்.

——————————————————-

டுத்து நாம் சென்றது: மென்சி எலெக்ட்ரானிக்ஸ். உரிமையாளர் திரு.சந்திரசேகர். இவர்களும் ஒரு WHOLESALE டீலர் தான். நம்மிடம் அதிக நேரம் உற்சாகமாக பேசினார் இவர். இவரிடம் பல தகவல்களை பெற முடிந்தது.

IMG 4643 640x480  “எந்திரன்  ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி  ரிப்போர்ட்!

என்ன சார்… எந்திரன் ஆடியோவுக்கு என்கொயரி எப்படி இருக்கு? நல்ல இருக்கா?
நிறைய பேர் வந்து கேட்டுட்டு போறாங்க. இன்னும் ரெண்டு நாள் போகணும்.

எந்திரன் படம் எப்படி போகும்னு நினைக்கிறீங்க?
அவர் படமெல்லாம் எப்பவுமே டாப் தான். நாங்க தைரியமா லாட் ஆர்டர் பண்றது அவர் படம் மட்டும் தான். அதுவும் ஆடியோ ரிலீசுக்கு முன்னாடியோ பாட்டு எப்படி இருக்கும்னு தெரியாமலே ஆர்டர் பண்றோம்னா அது அவர் ஒருத்தரு படத்துக்கு மட்டும்தான். மத்ததுக்கெல்லாம் பாட்டு ரிலீசான பிறகு தான்.

தலைவர் படம் எப்படி போகும்? அந்த ட்ரெண்டை பத்தி சொல்ல முடியுமா?
அவர் படம் வந்தா அந்த ஸ்டாக் முழுசும் கம்ப்ளீட்டா வித்துடும். சிவாஜில்லாம் சிங்கிள் சி.டி. கூட நிக்கலே.

ரெண்டாவது அவர் படம் மட்டும் எங்களுக்கெல்லாம் CASH & CARRY பிசினஸ் தான். “காசை வெச்சிட்டு சி.டி.யை எடுத்துகிட்டு போ” ன்னு ம்யூசிக் ரைட்ஸ் வாங்குறவங்க சொல்வாங்க. சிவாஜியை பொறுத்தவரை ஏ.வி.எம்.ல அவங்களே வெளியிட்டதனால நல்ல லாபம் பார்த்தாங்க. ஒரு சி.டி. விடாம எல்லாத்தையும் பிசினஸ் பண்ணி ஸ்டாக்சை ஜீரோ பண்ணிட்டாங்க. மிகப் பெரிய விஷயம் அது. நாங்களும் திரும்ப திரும்ப வாங்கி வந்து வாங்கி வந்து வித்துகிட்டே இருந்தோம்.

சிவாஜி மட்டுமில்லே… அவர் படம் எல்லாம் BEYOND COMPARABLE SALES தான்.

இதோ பாருங்க… இங்கேயும் இருக்கே ஒரு படம்… வாங்கி வெச்சு… படம் அவுட்டனாதும் அப்படியே நின்னு போச்சு… ஒன்னும் வேலைக்காகலை… என்று தாம் நொந்துபோன கதை ஒன்றை சொன்னார். அவர் மட்டுமல்ல, ரிச்சி தெருவில் நிறைய பேர் நொந்த கதை அது.

பெரும்பாலான கடைக்காரர்கள் நம்மிடம் ‘படையப்பா’ படத்தின் சாதனை பற்றி சிலாகித்து பேசினார்கள். கிட்டத்தட்ட நாம் சந்தித்த அனைத்து கடைகளிலும் இதை சொன்னார்கள்.

IMG 4633 640x480  “எந்திரன்  ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி  ரிப்போர்ட்!

திரு.சந்திர சேகர் தொடர்கையில்: “வெளியூர்ல இருந்தெல்லாம் வந்து க்யூ கட்டி நின்னு வாங்குனாங்க சார் படையப்பா கேசட்ஸை. போலீஸ் ப்ரொடெக்க்ஷன் எல்லாம் கொடுத்து தான் வெளியூருக்கு வாங்கிட்டு போறவங்களை அனுப்புவோம். பாக்ஸ் பாக்ஸா வாங்கிட்டு போவாங்க. அப்போல்லாம் இப்போ மாதிரி FM சேனல்ஸ் கிடயாது. ஆன்லைன்ல பாட்டு கேக்குற வசதி கிடையாது.”

“இப்போல்லாம் இன்டர்நெட் டவுன்லோட் வந்ததுலேயிருந்து ஆடியோ பிசினசே கேள்வி குறியாயிருச்சு. ஏகப்பட்ட வெப்சைட்ஸ் வேற அப்படியே சாங்க்சை எடுத்து போட்டுடுறாங்க. FM சேனல்ஸ் வேற 24 மணிநேரமும் பாட்டு போட்டுடுறாங்க. அதுவும் கிட்டத்தட்ட பத்து பன்னெண்டு stations இருக்கு. பாட்டு ரிலீஸ் அன்னிக்கே FM ல வருது. இதுல நாங்க எங்கே சி.டி. விக்கிறது?

ஆனா இது எல்லாத்தையும் மீறி சி.டி. விக்குது, நாங்களும் லாட் லாட்டா வாங்குறோம், பாட்டு வர்றதுக்கு முன்னாடியே நிறைய புக்கிங் நடக்குதுன்னா – அது சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருத்தருக்கு தான். அவர் ஆடியோ ரிலீசாகுற அன்னிக்கு ரேடியோ மார்கெட்டே திருவிழா மாதிரி இருக்கும். அதுபோலல்லாம் யாருக்கும் வராது. எல்லோரும் அவங்க கடைங்களுக்கு அந்த டயத்துல மட்டும் வேலை செய்ய கூட ஆளுங்களை வெச்சிக்குவோம். ஆடியோ வரலாற்றுல அவர் படங்களுக்கு மட்டும் எப்போதும் தனி இடம் – உயர்ந்த இடம் உண்டு. அவர் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.

நாம் மேற்படி கடைகளில் போட்டோ எடுக்கும்போதே, பலர் வந்து விசாரித்த வண்ணமிருந்தனர்.

IMG 4618 640x480  “எந்திரன்  ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி  ரிப்போர்ட்!

நாம் அடித்த ரவுண்ட்சில் கவனித்த சில சுவையான விஷயங்கள் கவனிக்க முடிந்தது:

1) எந்திரன் ஆடியோ சி.டி. 31 ஆம் தேதி காலையே கிடைக்கும் என பெரும்பாலான கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
2) இரண்டொரு நாளில் மேலும் சில எந்திரன் போஸ்டர் டிசைன்கள் வரவிருக்கின்றன.
3) எந்திரனின் ஆடியோ விற்பனை குறித்து விளம்பரம் வந்தால் ENQUIRY பன்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.
4) புதிய தலைமுறை ஹீரோக்களில் ஹாட் ஹீரோ கார்த்தி & தனுஷ் தான்.
5) என்ன தான் இன்டர்நெட், FM என்று வந்தாலும் சி.டி. வாங்குவதற்க்கென ஒரு பிரிவினர் இருக்கிறார்கள்.
6) சூப்பர் ஸ்டாரின் படங்களின் ஆடியோ விற்பனை மற்ற படங்களை விட பன்மடங்கு அதிகம். ஒப்பிட முடியாதது.
7) சில படங்களின் ஆடியோ சி.டி. விற்பனை சில கடைகளில் சிங்கிள் டிஜிட் விற்பனையை கூட தாண்டவில்லை.
icon cool  “எந்திரன் ஆடியோ சாதனை  படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்! சில படங்களின் பாடல்கள் லேட் பிக்கப் ஆகி, படம் ரிலீசாகி ஹிட்டான பிறகு பிறகு நன்கு விற்கும். (உ.ம்: சுப்ரமணியபுரம், யாரடி நீ மோகினி)
9) எந்திரனை பொறுத்தவரை இது வரை வெளியான அனைத்து ஆடியோ சாதனைகளையும் முறியடிக்கும் என்று ரேடியோ மார்க்கெட் நம்புகிறது.

OnlySuperstar.com in twitter

Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.

Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.

———————————————————————-

OnlySuperstar.com in facebook

Join us with facebook

http://www.facebook.com/pages/OnlySuperStar-Fans/284274509690

0 comments:

Post a Comment