Thursday, September 30, 2010

Aishwarya rai interview (எந்திரனுக்காக மகிழ்ச்சியோடு கஷ்டப்பட்டோம்!-ஐஸ்வர்யா ராய்)


எந்திரன் படத்துக்காக ரஜினி [^] சார், நான், ஷங்கர் என அனைவருமே மகிழ்ச்சியோடு கஷ்டப்பட்டோம், என்றார் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய்.

மும்பையில் சமீபத்தில் நடந்த ரோபோ (எந்திரன்) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், அளித்த பேட்டியிலிருந்து...

நான் நடிக்கும் முதல் சயின்ஸ் பிக்ஷன் படம் [^] எந்திரன். பொதுவா எல்லோரும் இந்த மாதிரி படங்களுக்கு ஹாலிவுட்டை உதாரணமா காட்டுவாங்க. ஆனா எந்திரன் அதுக்கும் மேல. இதுபோல ஒரு சப்ஜெக்டை ஹாலிவுட்டில் கூட, இத்தனை பிரமாண்டமா சொன்னதில்லை.

இந்தப் படத்தில் எனக்கும் நிறைய ஆக்ஷன் சீன்ஸ் இருக்குனு சொன்னார். ஷங்கரோட ஸ்டோரிபோர்டை பார்த்தப்ப இவ்வளவு ஆக்ஷனானு பிரமிச்சுப் போனேன்.. எப்படி இதையெல்லாம் விஷுவலா கொண்டு வரப் போறார்னு நினைப்பேன்.. ஷூட்டிங் நடந்தப்பதான் அவர் எந்த அளவுக்கு கவனமா இதுக்கு ப்ளான் பண்ணிருந்தார்னு புரிஞ்சுது.. வொண்டர்புல் ஜாப்!

எந்திரன்ல நான் ஒரு ஸ்டூடன்டா வர்றேன்... சனா என்னோட பேரு. இதுக்கு மேல சொன்னா தப்பு.. படம் பாத்துட்டு நீங்கதான் என் கேரக்டரை பத்தி சொல்லணும்..

'கிளிமஞ்சாரோ' பாடலை ஷூட் பண்றதுக்கு மச்சுபிச்சு மலைய செலக்ட் பண்ணினதே சூப்பர் ஐடியாதான்.. உலகத்தின் எங்கோ ஒரு மூலைல இருக்கிற அந்த லொகேஷனை கண்டுபிடிச்ச ஷங்கரை பாராட்டணும்.. அந்த இடத்துக்கு போய் சேர்றதுல இருந்து பாடல் ஷூட் பண்ணி முடிச்ச வரைக்கும் என்னோட அனுபவத்தை மறக்கவே முடியாது.. பெரிய அட்வெஞ்சர் அது.. நிறைய டான்சர்கள், காஸ்ட்லியான காஸ்ட்யூம்ஸ்.. ரொம்ப என்ஜாய் பண்ணினேன். ஏன்னா, இந்த மாதிரியான வாய்ப்பு என் கேரியர்ல கிடைச்சதில்லை.

ஸ்டைல் கிங் ரஜினி!

'காதல் அணுக்கள்' இப்படி அட்டகாசமான படத்துல இந்த மாதிரி ஒரு மெலடியானு அசர வைக்கிற பாடல். எனக்கு ரொம்ப பிடிச்ச மெலடி அது. அடிக்கடி முணுமுணுக்கிற பாடலும் கூட. பிரேசில்ல இருக்கிற லாங்காய் பாலைவனத்துல ஷூட் நடந்துது. இப்படியொரு லொகேஷனை கற்பனைலகூட பார்த்ததில்லை. பாலைவனத்துக்கு நடுவுல குட்டி குட்டியான ஏரிகள் பிரமாதம். ஸ்டைல் கிங் ரஜினி இந்த பாடல் சீன்ல செம கேஷுவலா நடிச்சிருப்பார்.. பாத்தா மெய்மறந்து நிப்பீங்க, நிச்சயமா..

'அரிமா அரிமா' பாடல் படத்துல முக்கியமான சிச்சுவேஷன்ல வருது. ரஜினி சாருடன் கிளாமரான காஸ்ட்யூம்ல ஆடியிருக்கேன். இந்தப் பாட்டுக்கும் சரி, எந்திரனுக்காவும் சரி நாங்க எல்லோருமே சந்தோஷமா கஷ்டப்பட்டோம் என்பதுதான் பொருத்தமான வார்த்தை.

கடவுளின் அற்புதப் படைப்புகள் ரஜினி, அமிதாப்

ரஜினி சாரை பத்தி எக்கச்சக்கமா கேள்விப்பட்டிருக்கேன்.. படிச்சிருக்கேன்.. படத்துல அவரோட நடிச்சதும், அவர் நடிப்பை பக்கத்துல இருந்து பார்த்ததும் புது அனுபவம்.. அவரோட கமிட்மென்டை பார்த்து அசந்துட்டேன். அற்புதமான மனிதர். சூப்பர் ஸ்டார்ங்கிற பந்தா கொஞ்சம்கூட இல்லாம எளிமையா பழகினார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன்.

என் வீட்டில் அப்பா (அமிதாப்) என்ற சூப்பர் ஸ்டார்... இங்கே ரஜினி என்ற சூப்பர் ஸ்டார். இந்த இருவருமே கடவுளின் அற்புதப் படைப்புகள். எளிமைதான் இவர்களின் அழகு. எளிமைதான் இவர்களை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. இவர்களிடம் நான் மட்டுமல்ல, எல்லோருமே கற்றுக் கொள்ள ஏராளம் உள்ளது.

எந்திரன்ல பல காட்சிகள்ல ரஜினி சாரோட ஸ்டைல், நடிப்பு பார்த்து என்னையே மறந்து போய் நின்னிருக்கேன். என் அனுபவத்தில் இதுபோல எப்போதும் நடந்ததில்லை.

எந்திரன் மாதிரியான ஒரு பிரமாண்டமான படத்தை எடுக்கணும்னா அது கலாநிதி மாறன் போன்றவர்களால் மட்டும்தான் முடியும்னு ஷங்கர் சொல்லுவார்.. அது எவ்வளவு கரெக்ட்னு படம் பார்க்கும்போது ஒவ்வொருத்தரும் புரிஞ்சுக்குவாங்க. இந்திய சினிமா [^] வரலாற்றுல எந்திரன் கண்டிப்பா ஒரு மைல்கல்.. இதுல நடிச்ச அனுபவங்களை என்னால் மறக்கவே முடியாது!" என்றார் ஐஸ்வர்யா.

0 comments:

Post a Comment