Sunday, September 26, 2010

இயக்குநர் சங்க கலை விழாவில் பங்கேற்கும் ரஜினி - கமல்!


சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நடக்கும் நட்சத்திரக் கலை விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், கலைஞானி கமல்ஹாஸனும் பங்கேற்கிறார்கள்.

வரும் அக்டோபர் 23-ந்தேதி நடக்கும் இந்த விழாவில், காலை 10 மணி முதல் 1 மணி வரை இயக்குனர்களும், சமுதாய விழிப்புணர்வு திரைப்படங்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு நட்சத்திர கலை விழா நடக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்- நடிகைகள் கலந்து கொள்கின்றனர். இந்தி நடிகர்- நடிகைகளும் அழைக்கப்படுகிறார்கள்.

நட்சத்திர கலைவிழாவில் நடிகர்- நடிகைகள் நடன நிகழ்ச்சிகள், பின்னணி பாடகர்- பாடகிகள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் போன்றவைகளும் நடைபெறுகிறது. விழாவையொட்டி 23-ந்தேதி அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.

விழா குறித்து இயக்குனர் சங்கத்தலைவர் பாரதிராஜா, பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இயக்குனர் சங்கம் 40-ம் ஆண்டு விழாவில் அனைத்து மொழி இயக்குனர்களும் கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர். நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 23-ந்தேதி வெகு சிறப்பாக இவ்விழா நடைபெறும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment