Wednesday, September 29, 2010

Rajini's Enthiran Special Show at Escape ('எஸ்கேப்'பில் நாளை எந்திரன் சிறப்புக் காட்சி!)


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், உலகமே ஆவலுடன் பார்க்கக் காத்துக் கிடக்கும் எந்திரன் படத்தின் சிறப்புக் காட்சி நாளை மாலை சென்னை எஸ்கேப் சினிமாவில் நடைபெறுகிறது.

மிக மிக முக்கிய விஐபிக்கள் மட்டுமே பங்கேற்கும் இந்தக் காட்சி, இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது (நாம் கடந்த வாரமே வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்!). இந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் [^] ஷங்கர் உள்பட மிக முக்கியமானவர்கள் பங்கேற்கிறார்கள். ராயப்பேட்டையில் சத்யம் [^] சினிமாஸுக்கு சொந்தமான புதிய மல்டிப்ளெக்ஸான எஸ்கேப் சினிமாவில் இந்தக் காட்சி நடக்கிறது.

திரையுலக, அரசியல் [^] விவிஐபிகளுக்காக ஒரு சிறப்புக்காட்சி வெள்ளிக்கிழமை மாலை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. இந்தக் காட்சியிலும் ரஜினி பங்கேற்று அனைவரையும் வரவேற்கிறார். முன்னதாக அவர் ஹைதராபாதில் நடக்கும் பிரிமியர் காட்சியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

மும்பை சிறப்புக் காட்சியில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்பார் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment