Sunday, September 26, 2010

ரஜினி ரசிகர்கள் எந்திரன் பட பிரசார பயணம்

ந்திரன் படத்தில் ‘எந்திரன் ரஜினி’ 100 அடியை தாண்டுவதாக ஒருகாட்சி இருக்கிறதாம். அதை போலதான் டிக்கெட் விற்பனையில் எட்டுவைத்த மறுநொடியில் எட்டடி, பதினாறடி என்று படுவேகம் காட்டிவருகிறது எந்திரன்.

அமெரிக்காவில் 20ந் தேதி தொடங்கிய, எந்திரன் டிக்கட் விற்பனை எந்திர வேகமாக நடந்து வருகிறது. வட அமெரிக்கா முழுவதுக்குமான ஒருவாரகால டிக்கெட் மொத்தமும் பத்தே நிமிடங்களில் அடவான்ஸ் புக்கிங்காக விற்பனையாகி தீர்ந்து விட்டது. அது குறித்த செய்தியை நாம் இரண்டு நாட்களுக்கு முன்பே பார்த்தோம்.

இப்போது தமிழகத்திலும் அதிரடி விற்பனையை தொடங்க அடியெடுத்துவைத்துள்ளது எந்திரனின் அட்வான்ஸ் புக்கிங்...

உலகமெங்கும் 3000 திரையங்குகளில் வரும் அக்டோபர் 1 ந் தேதி முதல் திரைத்திருவிழா கொண்டாடவுள்ளது எந்திரன். சென்னையில் 35 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. குறிப்பாக அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகள்.

சென்னையில் அபிராமி 7 நட்சத்திர திரையரங்கில் நேற்று முன்தினம் மாலை அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் ஆரம்பமானது. டிக்கெட் விற்பனை அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. (டிக்கெட் விலை ரூ 100 மற்றும் ரூ 120)

இன்றைய நிலவரப்படி முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகள் மொத்தமும் விற்பனையாகிவிட்டது.

சத்யம் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இன்னும் சில நாட்களில் எந்திரனுக்கான அட்வான்ஸ் புக்கிங்
தொடங்கவுள்ளது.
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்கூட சில திரையரங்குகளில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கப்பட்டுவிட்டதாம். விரைவில் எல்லா திரையரங்குகளுக்குமான அட்வான்ஸ் புக்கிங் அறிவிக்கப்படவுள்ளது. எப்படியும் எந்திரன் டிக்கெட்டை முன்பதிவு செய்து விடவேண்டும் என்று ரசிகர்கள் மும்முரம் காட்டிவருகிறார்கள்.

இந்நிலையில்...


ரஜினி ரசிகர்கள் எந்திரன் பட பிரசார பயணத்தை கன்னியாகுமரியில் இன்று தொடங்கினர்.

தாம்பரம் சென்று அங்கிருந்து திருப்பூரில் பயணத்தை முடிக்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

‘எந்திரன்’ படம் வரும் 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

திருப்பூர் மாவட்ட மக்கள் பொதுநல இயக்கம் மற்றும் தமிழ்நாடு ரஜினி பொது தொழிலாளர் சங்கம் இணைந்து தமிழகம் முழுவதும் ‘எந்திரன்’ படத்தின் வாகன பிரசார பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

அதன்படி, இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பிரசார வாகன பயணம் தொடங்கியது. காந்தி மண்டபம் அருகே பிரசார பயணத்தை ரஜினி மன்ற மக்கள் பொதுநல இயக்க தலைவர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

ஒரு வாகனத்தில் கலை குழுவினர் சென்றனர். மற்றொரு திறந்த வாகனத்தில் ரஜினி மற்றும் ரோபோ வேடம் அணிந்த மூன்று பேர், ஆட்டம் ஆடி பாட்டு பாடியபடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

பிரசார பயணத்தில் மொத்தம் 5 வாகனங்கள் சென்றன. இவர்கள் நாகர்கோவில், திருச்செந்தூர், திருநெல்வேலி, ராஜபாளையம், திருமங்கலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திண்டிவனம், தாம்பரம், திருவண்ணாமலை, ஈரோடு வழியாக அக்டோபர் 2-ம் தேதி திருப்பூரை சென்றடைகின்றனர்.

பிரசார பயண குழுவினருக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தலைவன் ரசிகன்னா சும்மாவா ?

0 comments:

Post a Comment