Sunday, September 26, 2010

இந்தியாவுல இனி இதுமாதிரி படம் தயாரிக்கறது கஷ்டம்...


‘எந்திரன்’ மாதிரி ஒரு படம், இனி இந்தியாவில் தயாரிக்கப்படுமா என்பது தெரியாது. இந்த சவாலான படத்தில் நான் பணியாற்றியது பெருமையான விஷயம்’’ என்கிறார் சாபு சிரில். இந்திய சினிமாவின் ஹாட் ஆர்ட் டைரக்டர்.

‘‘பத்து வருஷங்களுக்கு முன்னாலயே ஷங்கர் இந்த கதையை சொன்னார். அப்பவே கொஞ்சம் வித்தியாசமா போட்டோ ஷூட்டெல்லாம் பண்ணினோம். அதுக்கப்புறம் ஷங்கர் மற்ற வேலைகள்ல பிசி. நானும் அதை மறந்துட்டேன். மூணு வருஷங்களுக்கு முன்னால, திடீர்னு ஒரு நாள் ‘‘எந்திரன்’ பண்றோம். நீங்கதான் ஆர்ட் டைரக்டர்’னு ஷங்கர் சொன்னார்.

எனக்கு ஜில்லுனு ஆயிடுச்சு. ஏன்னா, படத்தோட கதை எனக்கு தெரியும். இந்த மாதிரி சயின்ஸ் பிக்ஷன் படத்துல வேலை பார்க்கிறது சவாலானது. அந்த சவாலை சூப்பரா பண்ணிடலாம்னு சந்தோஷமா முடிவு பண்ணினோம்...’

படத்துல உங்க வேலைதான் ஜாஸ்தின்னு டைரக்டர் ஷங்கர் சொல்றாரே?

ஆமா. அதிகமா படத்தை செட்லதான் எடுத்திருக்கோம். இப்படியொரு செட்டை எங்கயும் இதுவரை பார்த்திருக்க முடியாதபடி பண்ணியிருக்கோம். ரோபோ லேப், ஹைடெக் பில்டிங், அதுக்கான இன்டீரியர், எல்லாமே மிரட்டும்.

கொஞ்சம் பர்சனலா சொல்லμம்னா ஷங்கர் என்னை பிழிஞ்சு எடுத்துருக்கார். அதற்கான பலனை படம் பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன். இந்த படத்துல வேலை பார்த்தது எனக்கு சுகமான சவாலான அனுபவம்.

ரோபோவை எப்படி உருவாக்கினீங்க?

நான் ஏற்கனவே, ‘என் இனிய இயந்திரா’ சீரியலுக்காக ஒரு நாய்க்குட்டி ரோபோவை வெறும் அஞ்சாயிரம் ரூபாய்ல பண்ணினேன். அப்ப அது பெரிய தொகை. அது பரபரப்பா பேசப்பட்டுச்சு. ‘எந்திரனு’க்காக ஹாலிவுட்ல உள்ள பெரிய ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஸ்டூடியோக்களுக்கு போய் பார்த்தேன்.

எனக்கு நம்பிக்கை வந்தது. ஹாலிவுட் ஸ்டூடியோவுல ரோபோவை உருவாக்க கேட்டப்ப, அவங்க சொன்ன செலவு 5 கோடி ரூபாய். நான் ஷங்கர்கிட்ட வெறும், 5 லட்சம் ரூபாய்ல ரோபோ பண்றேன்னு சொன்னேன்.

அவர் ஆச்சர்யத்தோட என்னை பார்த்தாரு. சொன்னா மாதிரியே உருவாக்கினேன். ஹாலிவுட்லயும் ரெண்டு ரோபோக்களை உருவாக்கியிருக்காங்க. சிங்கத்தை பிடிச்சுட்டு ரஜினி வர்ற மாதிரி ஸ்டில் இருக்குல... அந்த சிங்க ரோபோவையும் நான்தான் உருவாக்கினேன்.

கிளைமாக்ஸ் செட் ரொம்ப பிரமாண்டம்னு சொல்றாங்களே?

ஆமா. படத்துல மொத்தம் 35 செட் இருக்கு. மாயாஜால் பக்கத்துல ஒன்னரை கிலோமீட்டர் தூரத்துக்கு போட்ட செட்டை பிரமாண்டம்னு சொல்லாம வேறெப்படி சொல்ல முடியும்? அங்க 30 நாட்கள் ஷூட்டிங் நடந்திருக்கு.

ஒரு பெரிய பால் உருண்டு வந்து மோதுற மாதிரி ஒரு காட்சி. டிரெய்லர்ல இதை பார்த்துட்டு, ‘எப்படி இதை பண்μனீங்க? அவ்வளவு மிரட்டலா இருக்கு’னு கேட்டாங்க. டிரெய்லர்ல பார்த்ததை விட, பல மடங்கு மிரட்டல் படத்துல இருக்கு.

கிளைமாக்ஸுக்காக போடப்பட்டிருக்கிற ஒரு ஹால் செட், இதுவரை யாருமே பண்ணாதது. எப்படிங்கறதை இப்ப சொன்னா சஸ்பென்ஸ் போயிரும்.

ஹாலிவுட்டுக்கு இணையான ஆர்ட் டைரக்ஷன்னு சொல்லலாமா?

கண்டிப்பா. டெக்னிக்கலா இந்தியாவுல இதுவரை வராத படம். ஷங்கரோட திரைக்கதைதான் படத்துக்கு முதுகெலும்பு. அடுத்தது ரஜினிகாந்த்தோட மாஸ். செட்டை பொறுத்தவரை, கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் பண்ணியிருக்கோம்.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள்ல, ஆர்ட் வொர்க் எதுனு யாராலயும் கண்டுபிடிக்கவே முடியாது. அதேமாதிரி இந்த படத்துலயும் எது செட், எது நிஜம்னு யாராலயும் கணிக்க முடியாது.

0 comments:

Post a Comment