இரண்டு வருடங்களாக நீடித்த எந்திரன் ஷூட்டிங் முழுமையடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் ரஜினி நடிக்கும் எந்திரன். இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
சுஜாதாவின் புகழ்பெற்ற நாவலான என் இனிய இயந்திரா மற்றும் அதன் தொடர்ச்சியான மீண்டும் ஜீனோ நாவல்களின் அடிப்படையில் உருவாகி வரும் விஞ்ஞானப் படம்.
ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், வில்லனாக டேனியும் நடித்துள்ளனர். கருணாஸ், சந்தானம் நகைச்சுவைக் கூட்டணி அமைத்துள்ளனர்.
பெரு, அமெரிக்கா, இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த எந்திரனின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவுற்றது. இப்போது படத்தின் எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக் கட்டப் பணிகளில் தீவிரமடைந்துள்ளது எந்திரன் குழு.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது பிளாகில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
“எந்திரன் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இப்போது எந்திரனின் எடிட்டிங் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டேன். இந்த இறுதி கட்ட ஷூட்டிங்கின்போது இரு இனிமையான விஷயங்கள் நடந்தன. ஒன்று ஏ ஆர் ரஹ்மான் எந்திரனுக்காக போட்டுக் கொடுத்துள்ள இறுதிப் பாட்டு. இப்போது அதன் ரெக்கார்டிங் பணிகள் நடந்து கொண்டுள்ளன.
அடுத்து ரெட்டசுழி ஆடியோவை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டது…”
விரைவில் எந்திரன் ஆடியோ ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment