இன்றைய திருமண நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை பெற்ற நம் தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் கூறியதை வைத்து தான் இந்த தொகுப்பை நான் தருகிறேன். நான் அங்கு செல்லவில்லை.
நண்பர்கள் எனக்கு அங்கிருந்தபடி அனுப்பிக்கொண்டிருந்த தகவல்களை ஒவ்வொன்றாக நோட் செய்து, முடிந்தளவிற்கு நமது தள TWITTER இல் TWEET செய்துகொண்டிருந்தேன். பணி முடிந்து திரும்பிய பின், ஒவ்வொன்றையும் திரும்ப கேட்டு இங்கு அளித்திருக்கிறேன்.
இது நம்ம வீட்டு கல்யாணம் – எனவே, எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு சந்தோஷத்தில் மூழ்குங்கள். (கொறிக்க, சுவைக்க அடுத்து எந்திரன் மெகா விருந்து ஒன்னு வந்துகிட்டு இருக்கு!)
முதல் நாள் நிகழ்ச்சி – HAPPENINGS !
* தனது குரு கே.பாலச்சந்தர் வந்ததும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் தலைவர். அவரது தலைமையில் தான் மாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
* மோகன் பாபு மற்றும் அஞ்சாநெஞ்சன் ஆகிய இருவரும் ஒன்றாக வந்தனர்.
* அஞ்சாநெஞ்சனை பார்த்ததும் தலைவர் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து அழைத்து சென்றார்.
* ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக்குடன் வர, திருமண ஹால் பரபரப்புக்குள்ளானது. வந்தவுடன் சூப்பர் ஸ்டாரை பார்த்து கையை அகலமாக காட்டி ஏதோ கூற தலைவர் சிரித்துவிட்டார்.
* உடனிருந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டு ஓடியாடி பணிபுரிந்தது திரு.எஸ்.பி.முத்துராமன். மனிதர் சும்மா பம்பரமாக சுழன்றுகொண்டிருந்தார்.
* வந்திருந்த முக்கியப் பிரமுகர்களில் சிலர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வசந்த் & கோ வசந்தகுமார், விஜய் வசந்த், ஸ்ரீப்ரியா, லதா, பாடகர் உண்ணிக்ரிஷ்ணன், சிவாஜி ராம்குமார், ஏ.சி. சண்முகம், ஐசரி கணேஷ், ஜேப்பியார், சுகன்யா ஆகியோர்.
* தலைவர் சரியாக 6.15 மணிக்கு வந்தார். உள்ளே சென்றவர் உடனே மாப்பிள்ளையுடன் வெளியே வந்து அந்த வளாகத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று குடுமபத்தினருடன் சாமி கும்பிட்டுவிட்டு பிறகு உள்ளே சென்றார்.
* அழகிரியை அழைத்து சென்று சூப்பர் ஸ்டாரின் சகோதரர் சத்திய நாராயண ராவிடம் மோகன்பாபு அறிமுகப்படுத்தினார்.
* டின்னருக்கு அருகே இருந்த ராஜா முத்தையா ஹாலை மொத்தமாக பயன்படுத்திக்கொண்டனர். பணியாளர்கள், மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வி.ஐ.பி.க்கள், பொது என அந்த மொத்த ஹாலையும் நான்காக பிரித்துவிட்டனர்.
* 18 வகையான ஐட்டங்களுடன் விருந்து பரிமாறப்பட்டது. அதில் நான்கு வகை இனிப்புக்களும் பரிமாறப்பட்டது. இது தவிர ஐஸ்க்ரீம், மற்றும் தாம்பூலம், சாலட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
* தலைவரின் மூத்த மருமகன் தனுஷ், மேடையில் கூடவே நின்றுகொண்டிருந்தார்.
* ரஜினி உற்சாகமாக காணப்பட்டார். மேடையை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்.
* வரும் அனைவரையும் வரவேற்று உபசரித்துகொண்டிருந்தது இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
* பாடகர் மனோ தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். தலைவரை பார்த்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்றார்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட அழைப்பாளர்களே மண்டபத்தில் நிரம்பியிருந்ததால் தலைவர் மிக சுதந்திரமாக நடமாடினார். அவரை யாரும் தொந்தரவு செய்யவில்லை. (செஞ்சா… சத்தி அங்கே ஆஜராகிவிடுவார்… வேற ஒண்ணுமில்லே..!)
* பந்தியில் அமர்ந்திருந்தவர்களிடம் இது வேண்டுமா அது வேண்டுமா என திரும்ப திரும்ப கேட்டு உபசரித்தவண்ணமிருந்தனர்.
* பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களில் ஒரு பிரிவினருக்கு உள்ளே டூட்டி. அவர்களில் மகளிர் காவலர்களை பார்த்து வெளியே டூட்டியில் இருந்த அவர்களது சக மகளிர் காவலர்கள் போருமிக்கொண்டிருன்தனர். “என்ன இது எங்களை இப்படி வெளியே நிக்க வெச்சுட்டாங்க. தலைவரை அடிக்கடி நேரில் பார்க்கமுடியலியே…” என்று அவர்களுக்குள் ஒரே சலசலப்பு + விவாதம்.
* எத்திராஜ் கல்லூரி இரண்டாவது SHIFT முடிந்து வெளியே வந்த மாணவியரில் ஒரு பெரிய க்ரூப், மண்டபம் வாசலுக்கு வந்து தலைவரை தரிசிக்க காத்திருந்து தலைவர் வந்தவுடன் ஹோய்… என்று கோரசாக கத்திவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு பின்னர் தான் அங்கிருந்து சென்றனர்.
* மண்டப வாயிலில் செண்டை மேள வாத்தியம் நடந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழியே சென்ற 27 H பேருந்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் “ஹே… தள வீட்டு கல்யாண்டா….” என்று ஆரவாரம் செய்தபடி சென்றனர்.
* உணவு பந்தியில் அமருபவர்கள் மைய மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகள் எதையும் மிஸ் செய்துவிடக்கூடாது என்று, டைனிங் ஹாலிலேயே பெரிய ஸ்க்ரீன் வைத்திருந்தனர். அதில் மேடையில் நடப்பது தெளிவாக தெரிந்தது.
* திருமணத்திற்கு வரும் சிரஞ்சீவியை வரவேற்று பிரஜா ராஜ்ஜியம் கட்சியினர் பேனர் வைத்திருந்தனர்.
* நம் தள வாசகர் அமைந்தகரை வேங்கடபதி வாழ்த்து போஸ்டர் எழுப்பியிருந்தார். அது அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.
* சத்தியநாராயணா, தலைவரின் உதவியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மேற்பார்வை செய்துகொண்டிருந்தனர்.
* திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அந்தப் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களான அம்பாசிட் பல்லவா, வெஸ்டன் பார்க் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தலைவர் காய்தே மில்லத் எதிரே இருக்கும் கன்னிமராவில் தங்கியதாக தெரிகிறது.
* பட்டு நிற பைஜாமா மற்றும் குர்தாவில் தலைவர் காட்சியளித்தார்.
(More points to be added here… Pls stay connected!)
0 comments:
Post a Comment