நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, சூப்பர் ஸ்டாரின் தங்க கிரீடத்தில் வைரத்தை பதித்தது போல எந்திரனின் இசை இதுவரை இல்லாத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானதன் காரணம் – இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த அசாத்திய வெற்றிகளுக்கு காரணம் காலத்திற்க்கேற்ப தனது இசையை அவர் அப்டேட் செய்துகொண்டதும், மொழிகளை கடந்து அவர் இசை ரசிக்கப்படுவதும் தான். நல்ல இசைக்கு மொழி ஒரு தடை கிடையாது. எந்த மொழியினராக இருந்தாலும் ஒரு நல்ல இசையை ரசிக்க முடியும். இதை கீழ்கண்ட இந்த சம்பவம் உறுதி படுத்துகிறது.
நன்றி…
- சுந்தர்
Mob: 9840169215
E-mail: simplesundar@gmail.com
——————————————————————————–
வணக்கம் சுந்தர்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரு நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்.
என்னுடைய சமிபத்திய விமான பயணத்தின் போது ஒரு அமெரிக்க ராக் ஸ்டார் ஐ சந்திக்க நேரிட்டது. என்னுடைய இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அவர் இருந்ததால், சில மணி நேரம் உடன் பயணிக்க முடிந்தது. சில ஆரம்ப அறிமுகத்திற்கு பின் நான் அமைதியாகி விட்டேன். ஒரு பிரபல அமெரிக்க பாடகருடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
இந்த நேரத்தில் நம் ‘எந்திரன்’ கை கொடுத்தார். பாடகர் இயற்கை உந்துதலுக்காக சென்று வரும் வேளை , நான் எனது மியூசிக் ப்ளேயரில் நம் ‘எந்திரன்’ ஐ இசைக்க ஆரம்பித்தேன். சற்று ஓலி அளவு அதிகமாக இருந்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். அவர் திரும்பி வந்ததும், என்ன பாடல் அது என்றார். நானும் இது தற்போது தான் இந்தியாவில் வெளியாகி இருக்கும் புதிய ஆல்பம் என்றேன். அகாடமி வின்னர் ரஹ்மானின் இசையில் வந்துள்ள soundtracks . இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள science fiction படத்தில் இடம் பெற்றுள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்றேன்.
அவருக்கு நமது film industry ஐ பற்றி தெரிந்திருக்க வில்லை. ஆனால் ரஹ்மானை பற்றி தெரிந்துள்ளார். ஆஸ்கார் வின்னர் ஆயிற்றே . தெரியாமல் இருக்குமா? Couples Retreat படத்தில் ரஹ்மானின் இசையை பாராட்டினார்.
இவ்வளவு பேசிய பிறகு, சற்று தைரியத்துடன், ‘ எந்திரன்’ இசையை கேட்க விருப்பமா என்று பிளேரை நீட்டினேன். ஒரு பாடல் கேட்டார் – பூம் பூம் ரோபோடா . அவர் கண்ணை மூடிக்கொண்டு ரசித்த விதத்தை பார்த்து, இன்னொரு பாடல் வேண்டுமா என்று அடுத்ததையும் கேட்க செய்தேன். இப்படியே, நான்கு பாடல் களை கேட்டார்.
கேட்டு விட்டு அவர் உதித்த வார்த்தைகள் ‘ excellent composition , I like them all , will listen when I reach home, in itunes with my system.’
எனக்கு சந்தோசம் பிடி பட வில்லை. தலைவர் பாடலை ஒரு அமெரிக்க பிரபல பாடகருக்கு அறிமுக படுத்திய சந்தோசம். என்னவென்று சொல்வது.
அவர் சொன்ன அடுத்த வரிகள் நம் ரஹ்மானை மேலும் கெளரவபடுத்துவதாக இருந்தது. ‘ I will try to listen more songs of Rahman ‘ . கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த அமெரிக்க பாடகர் பெயர் ‘ Ronny Munroe ‘ . அவரை பற்றிய விவரங்களை http://www.myspace.com/ronnymunroe
அந்த சந்திப்பிற்கு பின் மரியாதையை நிமித்தமாக நான் அனுப்பிய ஈமெயில் க்கு அவர் பதில் அனுப்பியது இன்னும் மகிழ்ச்சியை அதிகரித்தது. உங்கள் பார்வைக்கு அது இங்கே.
தலைவரை பற்றிய தகவல்களை களஞ்சியம் போல் சேகரித்து தலைவரின் அன்பு சாம்ராஜியத்திற்கு அற்பணிக்கும் உங்களிடம் இந்த தகவலையும் தெரிவிக்க விரும்பினேன். இதோ எழுதி விட்டேன். சற்று நிம்மதி அடைந்தேன்
இவர்களின் இந்த உரையாடலை சரியாக நமக்கு கொண்டு வந்து சேர்த்தது எது?
ஒரு இசை நிகழ்ச்யின்போது அந்த பாடகர் பாடுவதையும், ஆடியன்ஸ் காட்டும் அந்த முத்திரையையும் கவனியுங்கள்!!
Known is a drop. Unknown is an ocean.
…………………………………………………………………………………………………..
From: Ronny Munroe
I was very impressed with Rahman’s music. The way he fused different styles and vocalist’s together was intense , I felt like I was listening to something new and now. Very happening! I’m checking his stuff out little by little and It’s growing on me even more. Thanks for turning me on to this Thinakar. I’m going to go dig up some links now
Ronny
0 comments:
Post a Comment