Monday, August 23, 2010

ரோபோ உரிமை... சன் பிக்சர்ஸ் மீது விநியோகஸ்தர் புகார்!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள எந்திரன் படத்தின் தெலுங்கு [^] பதிப்பான ரோபோவின் விநியோக உரிமையை தனக்கு விற்பனை செய்வதாகக் கூறிய சன் பிக்சர்ஸ் பின்னர் மோசடி செய்து வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக தெலுங்கு விநியோகஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் சதலவாடா சீனிவாச ராவ் இது தொடர்பாக ஆந்திர பிலிம் சேம்பரில் சன் பிக்சர்ஸ் மீது கொடுத்துள்ள புகார்:

ரோபோ படத்தின் தெலுங்கு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ 27 கோடிக்கு நான் வாங்கினேன். இதற்காக ரூ 2 கோடிக்கு அட்வான்ஸ் தொகையை காசோலையாகவும் அனுப்பினேன். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒப்புக் கொண்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

இப்போது தொட்ட கண்ணா ராவ் என்பவருக்கு அதிக விலைக்கு ரோபோ உரிமையை சன் பிக்சர்ஸ் விற்றுள்ளது. இது மிகப் பெரிய மோசடி மற்றும் ஏமாற்று வேலை. அதிக விலைக்கு விற்பதற்காக எங்களுக்கு விற்றதை மறைத்து எங்கள் மீதே பழி போடுகிறது சன் பிக்சர்ஸ். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரையும் போலீசார் ஏற்க மறுக்கின்றனர்," என்று கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை [^] நடத்துவதாக பிலிம்சேம்பர் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஷங்கரின் மேலாளர் மற்றும் சீனிவாச ராவின் மேலாளர் இருவரும்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ரோபோ உரிமையை மோசடியாக விற்பனை செய்து ரூ 2 கோடியை சுருட்டியதாக சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே புகார் செய்து வழக்கு [^] தொடர்ந்துள்ளது.

இதன் பேரில் ஷங்கரின் மேலாளர் மற்றும் சீனிவாச ராவின் மேலாளர் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment