செல்ல மகள் சௌந்தர்யாவின் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் சூப்பர் ஸ்டார், தற்போது அரசியல் வி.ஐ.பி.க்களையும், திரையுலக நண்பர்களையும் அழைத்து வருகிறார்.
சகல மரியாதையுடன் ரஜினியே நேரில் சென்று அழைப்பதால் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள் வி.ஐ.பி.க்கள்!
முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்கனவே நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
அமிதாப், மம்முட்டி, சிரஞ்சீவி உட்பட அனைத்து நடிகர்களுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
இவர்கள் தவிர ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ரிச்சர்ட் கிரே-வுக்கும் தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் வீட்டின் கடைசி கல்யாணம் என்பதால், தானே முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து வருகிறாராம் ரஜினி.
அழைப்பிதழ் வழங்குதல் பற்றி சில துளிகள்…
*வேளச்சேரியில் உள்ள தாய் மண் அறக்கட்டளை அலுவலகத்திற்குச் சென்ற ரஜினிகாந்த் அங்கு திருமாளவனை நேரில் சந்தித்து அழைப்பிதழை அளித்தார்.
* தி.க. தலைவர் வீரமணியை அவரது அலுவலகத்தில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
* தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். விஜயகாந்தின் பிறந்தநாள் பற்றி கேள்விப்பட்ட தலைவர், நேரில் சென்று அவரை வாழ்த்திவிட்டு அப்படியே அழைப்பிதழும் கொடுக்க ப்ளான் செய்து, சாலிகிராம கிளம்பிவிட்டார்.
தனது வீட்டிற்கு வந்த சூப்பர் ஸ்டாரை விஜயகாந்த்தின் மைத்துனரும் தே.மு.தி.க தலைவர்களில் ஒருவருமான எல்.கே.சுதீஷ் வாசலுக்கு வந்து வரவேற்றார். விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்துக்கு தாம்பூலம் மற்றும் பழ வகைகளுடன் அழைப்பிதழ் வைத்து அழைப்பு விடுத்தார். எந்திரன் எப்படி வந்திருக்கு? எப்போ ரிலீஸ் என்று விஜயகாந்த் ஆவலுடன் கேட்டார். சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு பிறகு தான் கிளம்பினார் சூப்பர் ஸ்டார்.
* முன்னாள் அமைச்சர் அன்புமணியை அவரது இல்லத்திலேயே சந்தித்த சூப்பர் ஸ்டார், அவருக்கு தாம்பூலம் மற்றும் பழத்தட்டுக்களுடன் அழைப்பு வைக்க, அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி இருவரும் பெற்றுக்கொண்டனர். பொதுவாக அனைவரது நலத்தையும் விசாரித்த சூப்பர் ஸ்டார், அன்புமணியின் குழந்தைகள், அதாவது டாக்டர் ராமதாசின் பேரப்பிள்ளைகள் பற்றி விசாரிக்க தவறவில்லை. அழைப்பிதழை தேடி வந்து நேரில் கொடுத்ததை எண்ணி நெகிழ்ச்சியில் இருக்கிறார் அன்புமணி.
* அழைப்பிதழ் வைக்கும் விதத்தில் கூட தலைவரின் பாணியே தனி. சிலருக்கு முன்கூட்டியே “உங்கள் வீட்டுக்கு அழைப்பிதழ் வைக்க வருகிறேன். உங்கள் சௌகரியமான நேரம் எது?” என்று கேட்டுவிட்டு அவர்கள் சொன்ன நேரத்தில் கரெக்டாக ஆஜராகிவிடுவார். ரொம்ப நெருக்கமான சிலருக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஆஜராகி அவர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குவார். இன்னும் சிலருக்கு, அவர்கள் வீட்டில் உள்ள யாரிடமாவது, தொடர்புகொண்டு சம்பந்தப்பட்டவர் வீட்டில் இப்போது இருக்கிறாரா என்று கேட்டுக்கொள்வார். “நான் அங்கே வர்ரேன். அவர் கிட்டே சொல்லாதீங்க”. என்று கூறிவிட்டு திடீரென்று அங்கு போய் நிற்பார். அப்புறம் என்ன சம்பந்தப்பட்டவர்களின் குதூகலத்தை சொல்லவும் வேண்டுமா என்ன? திரையுலம் மற்றும் வெளியே உள்ள தனது நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் இந்த ஸ்டைலில் தான் அழைப்பு விடுத்தார்.
* அவரது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு அழைப்பிதழ் வைத்தபோது அவர் அடித்த கமெண்ட் : “என்னப்பா… நீயே இன்னும் மாப்பிள்ளை மாதிரி தான் இருக்கே. உன் பெண்ணுக்கு கல்யாணமா?” என்று. மேற்படி கமெண்ட்டை கேட்டதும் வெட்கத்தால் சற்று சிவந்தாராம் கறுப்பு தங்கம். (தலைவர் வெட்கப்படும்போது நீங்கள் பார்த்திருக்கீங்களா? அமைதியா இருக்கும் எரிமலை திடீர்னு பனிமலையா மாறி அந்த இடத்துல சாரல் அடிச்ச மாதிரி ஜில்லுன்னு இருக்கும்!)
* மேற்படி திருமண அழைப்பு சந்திப்புக்களில் மறந்து போய் கூட யாரிடமும் தலைவர் அரசியல் பேசவில்லை.
* தன்னை பிடிக்காதவர்கள், தனக்கு பிடிக்காதவர்கள் என்று எந்த பாகுபாடும் பார்க்காது அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் தலைவர்.
* ஜெயகாந்தன், பாலகுமாரன், லேனா தமிழ்வாணன், உள்ளிட்ட இலக்கிய / பத்திரிகை துறை நண்பர்களுக்கும் நேரில் அழைப்பு விடுத்துள்ளார் ரஜினி.
* ரசிகர்களை பொறுத்தவரை அவர்களுக்கென்று தனியாக ஒரு வரவேற்ப்பு இருக்குமென்று தெரிகிறது.
(குறிப்பு: தலைவர் இந்த போட்டோஸ்ல எல்லாம் எத்துனை அழகா, இளைமையா இருக்கிறார் பாருங்க. அதுவும் அந்த முதல் போட்டோல. அவர் சிரிப்புக்கு ஈடாகுமா இந்த உலகத்துல எதுவும்? வாவ்!)
Stay connected… More news to come… as it happened and as it happens!
0 comments:
Post a Comment