Saturday, August 21, 2010

எந்திரன் பக்கம் திரும்பின வடநாட்டு மீடியாக்கள் பார்வை!

ந்திரன் படத்தை பற்றி பிற மீடியாக்கள் எதுவும் இதுவரை விஷேஷ கவரேஜ் அளிக்கவில்லை. ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்திகளில் சிறிய அறிவிப்பாக எந்திரன் இசை வெளியீடு பற்றி இடம் பெற்றதே தவிர ஸ்பெஷல் கவேரேஜ் என்று யாரும் இதுவரை அளிக்கவில்லை.

எந்திரன் படத்தை சரியான அளவில் ப்ரொமோட் செய்ய சன் குழுமம் இருக்கிறது என்றாலும், மேலும் பல தொலைக்காட்சிகள் சேர்ந்தால் திருவிழா இன்னும் களைகட்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Robot 2 240031 640x426  எந்திரன் பக்கம் திரும்பின வடநாட்டு  மீடியாக்கள் பார்வை!
சிவாஜி வெளியீடு சமயத்தில், படத்தின் பாடல் வெளியீட்டிற்கும் பட ரிலீசுக்கும் இடையே இருந்த இடைப்பட்ட காலத்தில் பல ஆங்கில சானல்கள் மற்றும் வடநாட்டு ஊடகங்களில் தினந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்ற வண்ணமிருந்தன.

தற்போது முதன் முறையாக Headlines Today தொலைக்காட்சியில் எந்திரன் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியுள்ளது. இதன் மூலம் வடநாட்டு ஊடங்களின் எந்திரன் கவரேஜ்க்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

படத்தின் எதிர்பார்ப்பு, பாடல்கள், ட்ரெயிலர், இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட எந்திரன் குழுவினரின் பேச்சு உள்ளிட்ட பலவற்றை அடக்கி அட்டகாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.

எந்திரன் படப்பாடல்களின் அசாத்திய ஹிட், மற்றும் படத்திற்கு நாடு தழுவிய அளவில் எழுந்துள்ள எதிர்ப்பார்ப்பு, இதுவரை இல்லாத பட்ஜெட், கற்பனைக்கெட்டாத அளவில் நாள்தோறும் பரவும் சூப்பர் ஸ்டாரின் புகழ் இவையெல்லாம் தான் மேற்படி சானலை சிறப்பு நிகழ்ச்சி வழங்க தூண்டியது. (சூப்பர் ஸ்டாரின் ஹிந்தி ஆடியோ வெளியீட்டு உரையை பற்றி பல வடஇந்திய பத்திரிக்கைகள் மற்றும் வெப்சைட்டுகள் சிலாகித்து எழுதியுள்ளன.)

படத்தை ப்ரொமோட் செய்ய மலிவான தந்திரங்களை கையாளும் பாலிவுட் கலாச்சாரத்திற்கு நடுவே, எந்திரன் இசை வெளியீட்டு விழாவில், மிக மிக யதார்த்தமாக, நகைச்சுவையாக, அடக்கமாக பேசிய தலைவர் ரஜினியின் பேச்சு அவர்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்று HT சானல் வட்டாரங்கள் தெரிவித்தன. தற்பெருமைகளுக்கு பெயர் பெற்ற பாலிவுட் கான்களுக்கு நடுவே, இந்திய திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாரின் பேச்சு அவர்களை நெகிழச்செய்ததில் வியப்பேதும் இல்லை.

Ground Zero என்ற பெயரில் ‘Headlines Today’ தொலைக்காட்சி புதன்கிழமை வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோக்கள், கீழ்கண்ட லின்க்கில் உள்ளன.

(Complete URL address is embeded in the below text. So, don’t copy paste the link in browser separately. Instead click the url. It will lead you to the videos.)

Headlines Today Special Programme – Videos

http://headlinestoday.intoday.in

(Headlines Today server is behaving perculair. Retry one or more times if the link doesn’t open to videos page)

[END]

0 comments:

Post a Comment