Wednesday, August 25, 2010

Small Budget Films Affected Enthiran Release (எந்திரன் ரிலீஸ்.. குழப்பத்தில் சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள்!)


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள எந்திரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் [^] படங்களை வெளியிடுவோர் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

ஆகஸ்ட் இறுதியில் எந்திரன் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என்றானதும், செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது அந்த தேதியும் இல்லை என்றாகிவிட்டது.

இந்த நிலையில், எந்திரன் படம் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என்று மீடியாவில் செய்தி [^] வெளியாகியுள்ளது. ஆனால் அதிலும் உறுதி இல்லை.

செப்டம்பர் 23 அல்லது அக்டோபர் முதல்வாரம் என மாறி மாறி வரும் தகவல்களால், எந்திரன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாகிவிட்டது.

பொதுவாக ரஜினி பட வெளியீட்டுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே வேறு பெரிய படங்களை வெளியிடாமல் நிறுத்திவிடுவது வழக்கம். ஓரிரு சிறிய படங்கள் மட்டும் வெளியாகும்.

இந்த முறை தேதி உறுதியாகாததால், தங்கள் படங்களை வெளியிடுவதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

தேதி உறுதியாகத் தெரிந்தால், எந்திரன் வெளியான குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வார்கள்.

எந்திரன் தமிழ், தெலுங்கு [^] மற்றும் இந்தி இசை வெளியீட்டுக்குப் பின் எங்கும் எந்திரன் அலையாகவே இருந்தது. ரிலீஸ் தேதி முடிவாக அறிவிக்கப்படாததால், இப்போது எந்திரன் அலையும் சற்று அடங்க ஆரம்பித்துள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு இது சற்றே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

0 comments:

Post a Comment