Saturday, August 28, 2010

கமல்-கௌதமியைச் சந்தித்த ரஜினி-லதா!


உலக நாயகன் கமல்ஹாஸன் - கௌதமியை நேற்று சந்தித்தனர் சூப்பர் ஸ்டார் ரஜினி [^]யும் அவர் மனைவி [^] லதாவும்.

தங்கள் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை கமல் - கௌதமியிடம் கொடுத்த ரஜினி, நீண்ட நேரம் அவருடன் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.

திரையுலகில் ரஜினி - கமல் ரசிகர்களுக்குள் போட்டி இருந்தாலும், ரஜினிக்கும் கமலுக்கும் மிக நெருக்கமான நட்பு உண்டு. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் கலந்து பேசிவிட்டே முடிவெடுப்பது வழக்கம். அதே போல தனது வீட்டின் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதில் கமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வார் ரஜினி.

இப்போது தனது இளைய மகள் திருமணம் [^] என்பதால் கமல்ஹாஸன் - கௌதமிக்கு தம்பதி சமேதராக அழைப்பிதழ் தந்தார் ரஜினி.

அரசியல் விஐபிக்கள் பெரும்பாலானவர்களுக்கு நேரில் போய் அழைப்பிதழ் தந்துள்ள ரஜினி, இப்போது திரையுலக முக்கியப் புள்ளிகளை நேரில் சந்தித்து அழைத்து வருகிறார்.

கே பாலச்சந்தர், ஏவி எம் சரவணன், கேஆர்ஜி, ராம நாராயணன் போன்றவர்களுக்கு ரஜினி நேரில் அழைப்பிதழ் வைத்தார்.

செப்டம்பர் 3-ம் தேதி ராஜா முத்தையா மற்றும் ராணி மெய்யம்மை திருமண மண்டபங்களில் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் நடக்கிறது.

சௌந்தர்யாவின் திருமண உடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார். முகூர்த்தத்துக்காக முழுவதும் தஹ்க ஜரிகை வேலைப்பாடமைந்த பட்டுப்புடவை நெய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நேரடியாக ஆர்டர் கொடுத்து இந்தப் புடவையை நெய்துள்ளனர்.

0 comments:

Post a Comment