எந்திரன் இசை வெளியீட்டு விழாவில், ‘அடுத்த மாதம் எந்திரன் வெளியாகும்’ என்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
இந்தி ரோபோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், செப்டம்பரில் படம் வெளியாகும் என்று கூறினார். ரஜினியும் அவ்வாறே தெரிவித்தார்.
ஆனால் இப்போது, படத்தின் ரிலீஸ் தேதி மேலும் இரு வாரங்களுக்கு தள்ளிப் போகக் கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
“செப்டம்பர் 24-ம் தேதி படம் வெளியாகும் என்று முதலில் எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அக்டோபர் 8-ம் தேதி என்று சொல்லியிருக்கிறார்கள்…,” என்றார் ஒரு விநியோகஸ்தர்.
ஒரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் நடந்து கொண்டுள்ளன. இன்னொரு பக்கம் எந்திரனின் தமிழக, உலக உரிமைக்கான விலையைப் பேசி முடிக்காமல் உள்ளது சன் பிக்சர்ஸ். எனவே இந்த இரண்டு முக்கிய வேலைகளும் நிறைவுக் கட்டத்துக்கு வரும்போதுதான் உறுதியான தேதியைச் சொல்ல முடியும் என்கிறது எந்திரன் யூனிட்.
இயக்குநர் ஷங்கருக்கு ராசியான தேதி 8 என்பதால் அக்டோபர் 8- அன்றே ரிலீஸை வைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் சாதனைகள் படைத்த ‘சிவாஜி” 8-ம் தேதி வெளியிடப்படவில்லை. ஜூன் 15-ம் தேதிதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது!
ஆனால் இதுகுறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை சன் பிக்சர்ஸ் மற்றும் அதன் ஊடகங்கள் என்பதும் கவனிக்கத்தக்கது!
ரஜினியைப் பொறுத்தவரை அவரது பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. மூன்று மொழிகளுக்கும் அவரே டப்பிங் பேசியுள்ளார். இப்போது மகளின் திருமண வேலைகளில் பரபரப்பாக உள்ளார். அடுத்து சத்யா மூவீஸ் படத்துக்கான கதை விவாதத்திலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.
0 comments:
Post a Comment