மும்பையில் எந்திரன் இசை வெளியீடு நடக்கவிருப்பதையும் சூப்பர் ஸ்டார் அதற்க்கு செல்லவிருப்பதையும் கடந்த சில நாட்களுக்கு முன்பே நாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் மும்பை வருகிறாராம் – பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள. இதையே மும்பை பத்திரிக்கைகள் சிலாகித்து எழுதியுள்ளன.
‘Bangalore Mirror’ நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியின் கட்டிங் தனியே தரப்பட்டுள்ளது. தமிழாக்கம் இதோ..
ரஜினியால் முடியாதது என்பது எதுவுமே இல்லை. ரஜினி மும்பையில் தன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கிறார். ஆம் மும்பைக்கு, சனிக்கிழமை மாலை, எந்திரன் பட ஆடியோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார் சூப்பர் ஸ்டார்.
கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள போதிலும் ரஜினி தனிமையை போற்றும் ஒரு நபர். பொதுநிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்துகொள்கிறார். மக்களிடமிருந்து சற்று விலகியிருக்கவே அவர் விரும்புகிறார். எனவே மும்பை வருவதற்கு அவர் லேசில் ஒப்புக்கொள்ளவில்லை. இதில் கலந்துகொள்ளவும் அவர் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் ஹிந்தி மார்க்கட் மிகவும் சென்சிட்டிவானது என்றும் ரஜினி இந்த இசை வெளியீட்டில் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்றும் எந்திரன் டீம் கருதவே ரஜினி கடைசியில் ஒப்புக்கொண்டார்.
அவர் மனதை மாற்றியதில் பெரும்பங்கு இயக்குனர் ஷங்கருக்கு உண்டு. கடைசி நேரத்தில், “சரி… நான் வருகிறேன்” என்று அவர் சொன்னவுடன் எந்திரன் டீமுக்கு இன்ப அதிர்ச்சி தான். (எங்களுக்கெல்லாம் அவர் “சரி… அரசியலுக்கு வர்ரேன்” ன்னு சொன்னா இன்ப அதிர்ச்சி!)
[END]
0 comments:
Post a Comment