ரோபோவின் OFFICIAL தளத்தில் (www.robotthefilm.com) சுவையான கதை சுருக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள் அதனுடன் எனக்கு தெரிந்த சில விஷயங்களை சேர்த்து தமிழில் மொழி பெயர்த்து தருகிறேன்.
இடம் - சென்னை
நோக்கம் – மனிதனைப் போலவே உருவம் கொண்ட ரோபோவை தயாரிப்பது (சிட்டி)
அவசியம் - மனித சமுதாயத்திற்கு உதவுதல்
உருவாக்க காலம் - 10 ஆண்டுகள்
திறன் - வேகம் 1 tz, மெமரி 1 zb, பிராசசர் – பெண்டியம் அல்ட்ரா கோர் இவைகளுடன் ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள மோட்டார்
சிறப்பம்சங்கள் - இவன் ஒரு மனிதன். ஆனால் கருவில் பிறந்தவன் அல்ல. நிஜத்தில் உருவாக்கப்பட்டவன். இவனால் ஆடமுடியும், பாடமுடியும். மிக வேகமாக ஓட முடியும். தவிர மனிதர்கள் செய்யும் எல்லாம் செய்யமுடியும். காற்றோ, நெருப்போ, தண்ணீரோ இவனை ஒன்றும் செய்ய முடியாது.
இவனுக்கு உணவு எது தெரியுமா?
மின்சாரம்!
இவன் சொல்வதை செய்யும் கிளிப்பிள்ளை.
தன்னை தான் காப்பாற்றி கொள்ள மனிதன் பொய் சொல்லுவான். ஆனால் இவனுக்கு பொய் என்றாலே என்னவென்று தெரியாது.
தீர்வு - இவனுக்கு நினைவுத் திறனும், சிந்தனைத் திறனும் அதிகம். ஒரு பெரிய டெலிபோன் டைரக்டரியை ஜஸ்ட் பக்கங்களை வேகமாக புரட்டிக்கொண்டே மனப்பாடம் செய்துவிடுவான். அதை அப்படியே சொள்ளவும்ஸ் செய்வான். இவனால் முடியாதது ஒன்றே ஒன்று தான். மனிதனின் உன்வர்வுகளை புரிந்துகொள்ளமுடியாதது. இவனை உருவாக்கிய டாக்டர் வஸி, பின் விளைவுகளை அறியாமல், இவனுக்கு மனிதனின் உணர்வுகளை அப்படியே தரும் சென்சார்களை பொருத்திவிடுகிறார். அதன் மூலம் சிட்டி மனித உணர்வுகளை பெறுகிறான். ஆனால் அவனுக்கு முதலில் வரும் உணர்வு எது தெரியுமா? காதல்!
இவனுக்கு எல்லாம் தெரியும். தற்காப்பு கலைகளான கராத்தே முதல் குங்ஃபூ வரை. அனைத்தும் தெரியும். இவனுக்கு தெரியாத மொழிகளே இல்லை.
ஆனால் இவனுக்கு தெரியாதது என்ன தெரியுமா? பொய் பேசுவது, குழிபறிப்பது, முதுகில் குத்துவது, பொறாமை படுவது … இதெல்லாம் தெரியாது. நீங்கள் எப்படியோ அப்படித்தான் இந்த ரோபோவும் உங்களிடம் நடந்துகொள்வான். சுருங்கச் சொன்னால் இவன் நல்லவனுக்கு நல்லவன். வில்லனுக்கு வில்லன்.
அவனை உருவாக்கிய டாக்டர் வசீகரனுக்கு குறுக்கே அந்த காதல் வருமா?
டாக்டர் வசீ உருவாக்கிய எந்திரனே அவரை அழிக்க முற்படுமா?
ரோபோவில் அரசியல் இருக்குமா? (இது நம்ம ADDITION!)
நீங்க எதிர்பாராத ‘முதன்மை’யான அதிரடி அரசியல் சீன் ஒன்னு படத்துல இருக்குதுங்க!!
மிச்சத்தை வெள்ளித் திரையில் வரும் செப்டம்பரில் காண்க…!
[END]
0 comments:
Post a Comment